ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகமாகும் Samsung Galaxy Fold: எப்போது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்

சாம்சுங் நிறுவனம் நீண்ட இழுபறிக்கு பின்னர் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியான Samsung Galaxy Fold இனை கடந்த 6 ஆம் திகதி தென்கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் 1,600 பவுண்ட்ஸ்கள் பெறுமதியில் குறித்த கைப்பேசியினை கொள்வனவு செய்ய முடியும்.

இப் பெறுமதியானது அமெரிக்கா டொலர்களில் 1,980 டொலர்களாக காணப்படுகின்றது.

அடுத்த கட்டங்களாக அமெரிக்கா, சிங்கப்பூரில் Samsung Galaxy Fold அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏனைய நாடுகளிலும் இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்