5G கைப்பேசி விற்பனையில் இமாலய இலக்கை எட்டியது சாம்சுங்

Report Print Givitharan Givitharan in மொபைல்

கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப உலகில் அதிக பேசுபொருளாக இருந்தது 5G தொழில்நுட்பமாகும்.

காரணம் பல நாடுகளிலும் இத் தொழில்நுட்பமானது அறிமுகம் செய்ய ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அதேபோன்று சில ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்களும் 5G தொழில்நுட்பம் கொண்ட கைப்பேசிகளை அறிமுகம் செய்தமையும் மற்றுமொரு காரணமாகும்.

இந்த வரிசையில் சாம்சுங் நிறுவனமும் Galaxy S10 5G எனும் தனது முதலாவது 5G தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை கடந்த ஏப்ரல் மாதத்தின் இறுதிப்பகுதியில் அறிமுகம் செய்திருந்தது.

அதன் பின்னர் அண்மையில் Galaxy A90 5G மற்றும் Galaxy Fold 5G ஆகிய 5G கைப்பேசிகளையும் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இவ்வாறு 5G கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் சுமார் 2 மில்லியன் கைப்பேசிகளை சாம்சுங் நிறுவனம் இதுவரை விற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ் வருட முடிவிற்குள் இந்த எண்ணிக்கை 4 மில்லியனை எட்டிவிடும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers