புதிய ஐபோன்களின் சேமிப்பு நினைவத்தின் கொள்ளவு தொடர்பில் வெளியான குற்றச்சாட்டு

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஆப்பிள் நிறுவனம் கடந்த 10 ஆம் திகதி தனது புதிய iPhone 11 கைப்பேசிகளை அறிமுகம் செய்து வைத்தது.

இக் கைப்பேசிகள் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் சர்ச்சையான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 3 வகையான கைப்பேசிகளிலும் ஆரம்ப சேமிப்பு கொள்ளளவாக 64GB தரப்பட்டுள்ளது.

எனினும் இச் சேமிப்பு கொள்ளளவு போதியதாக இல்லை என்பதே குற்றச்சாட்டு ஆகும்.

தற்போதைய காலகட்டத்தில் கைப்பேசி பிரியர்கள் அதிக அளவில் பாடல்கள் மற்றும் வீடியோக்கள் என்பவற்றினை கைப்பேசிகளில் சேமித்து பயன்படுத்துகின்றனர்.

இப்படியிருக்கையில் 64GB கொள்ளளவினை விடவும் அதிகமான கொள்ளளவினைக் கொண்ட ஐபோன்களில் இருந்து அறிமுகம் செய்து வைத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட iPhone 8 கைப்பேசிகளில் ஆரம்ப சேமிப்பு கொள்ளளவு 64GB ஆக வழங்கப்பட்டிருந்தமை வரவேற்பைப் பெற்றிருந்தது.

அதற்கு முந்தைய ஐபோன்களில் 32GB கொள்ளளவே ஆரம்ப சேமிப்பு கொள்ளளவாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும் iPhone 11 கைப்பேசியானது கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட iPhone XR கைப்பேசியினை விடவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை வரவேற்பினைப் பெற்றுள்ளது.

ஆனால் iPhone 11 Pro மற்றும் iPhone 11 Pro Max என்பன அதிக பெறுமதி உடையவை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers