64 மெகாபிக்சல் கமெராவினை கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்யும் சாம்சுங்

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஸ்மார்ட் கைப்பேசிகளில் தற்போது அதிகளவான தொழில்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டுவிட்டன.

இதன் காரணமாக புதிதாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் கமெராக்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

அண்மையில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த iPhone 11 கைப்பேசிகளிலும் கமெராவுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சாம்சுங் நிறுவனமும் கைப்பேசி வரலாற்றில் முதன் முறையாக 64 மெகாபிக்சல் கமெராவினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் கடந்த மே மாதத்தின் பிற்பகுதியில் வெளியாகியிருந்தது.

இப்படியிருக்கையில் இம் மாத இறுதிக்குள் குறித்த கைப்பேசி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த கைப்பேசியின் முழுமையான சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகாத நிலையில் Qualcomm Snapdragon 675 mobile processor மற்றும் பிரதான நினைவகமாக 6GB RAM ஆகியவற்றினையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்