பட்ஜெட் விலையில் Redmi அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
151Shares

உலகத்தரம்வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் Redmi நிறுவனம் தற்போது மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.

Redmi 8A எனும் இக் கைப்பேசியானது 6.22 அங்குல அளவுடையதும் IPS தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Qualcomm Snapdragon 439 mobile processor, பிரதான நினைவகமாக 2GB அல்லது 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

சேமிப்பு நினைவகத்தினை microSD கார்ட்டின் உதவியுடன் அதிகரிக்கும் வசதியும் காணப்படுகின்றது.

மேலும் 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா ஆகியவற்றுடன் 4,000mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியின் விலையானது இந்திய மதிப்பில் 6,499 ரூபாய்கள் ஆகும். அதாவது அண்ணளவாக 98 டொலர்கள் ஆகும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்