பேஸ்புக்கில் அதிரடி மாற்றம்: லைக் எண்ணிக்கைகள் உட்பட இவற்றை பார்வையிட முடியாது

Report Print Givitharan Givitharan in மொபைல்

பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கிலிருந்து சில வசதிகள் மறைக்கப்படவுள்ளன.

இதன்படி ஒருவருடைய போஸ்ட்டிற்கான லைக்குகளின் எண்ணிக்கை, ரியாக்ஷன்கள் மற்றும் வீடியோக்களுக்கான பார்வையின் எண்ணிக்கை என்பவற்றினை மற்றையவர்கள் பார்க்க முடியாது.

எனினும் இவ் வசதி மறைப்புக்கள் அவுஸ்திரேலிய பயனர்களுக்கே வழங்கப்படவுள்ளது.

இதற்கான பரீட்சார்த்த முயற்சிகள் இன்றைய தினம் முதல் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த தகவலை அவுஸ்திரேலியாவிற்கான பேஸ்புக்கின் இயக்குனர் Mia Garlick வெளியிட்டுள்ளார்.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் இன்ஸ்டாகிராமிலும் இவ்வாறான வசதி மறைப்புக்கள் கடந்த ஜுலை மாதம் முதல் சோதனை முயற்சியில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்