ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் பல நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.
எனினும் ஏட்டிக்கு போட்டியாக புதிய வசதிகளை உள்ளடக்கி கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படுவதனால் நாளுக்கு நாள் கைப்பேசி விற்பனையும் களைகட்டி வந்தது.
ஆனால் அண்மைய ஆய்வின்படி உலக அளவிலான ஸ்மார்ட் கைப்பேசி விற்பனை கடந்த வருடத்தினை விடவும் 3.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அறிமுகமாகியுள்ள பெரும்பாலான கைப்பேசிகள் 4G தொழில்நுட்பத்தினைக் கொண்டவையாகும்.
எனினும் இவ் வருடம் முதல் 5G தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுவரும் நிலையில் இத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகள் சில வாரங்களுக்கு முன்னரே அறிமுகமாக ஆரம்பித்துள்ளன.
கைப்பேசி விற்பனை சரிவுக்கு இதுவும் காரணமாக இருக்கலம் என நம்பப்படுகின்றது.
எனினும் 5G கைப்பேசி விற்பனையானது 2020 ஆம் ஆண்டு 10 சதவீதத்தினால் அதிகரிக்கும் எனவும், 2023 ஆம் ஆண்டில் 56 சதவீதத்தினால் அதிகரிக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.