உலகின் முதலாவது மடிக்கக்கூடிய கைப்பேசி இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்

சாம்சுங் நிறுவனம் உலகின் முதலாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியான Samsung Fold-யினை சில வாரங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசியின் விலையானது 164,999 இந்திய ரூபாய்களாக காணப்படுகின்றது.

அத்துடன் இதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சுங் கைப்பேசிகளை விடவும் அதிக வினைத்திறன் உடையதாகவும் இருக்கின்றது.

அதாவது இக் கைப்பேசியில் பிரதான நினைவகமாக 12GB RAM தரப்பட்டுள்ளதுடன், 512GB சேமிப்பு நினைவகமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் கறுப்பு நிற கைப்பேசிகளே அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இவற்றிற்கான முன்பதிவுகளை இம் மாதம் 4 ஆம் திகதி முதல் மேற்கொள்ள முடியும்.

அதேவேளை இம் மாதம் 20 ஆம் திகதி முதல் டெலிவரிகள் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers