வாட்ஸ் ஆப்பின் அதிரடி முடிவு: இனி இக் கைப்பேசிகளில் பயன்படுத்த முடியாது

Report Print Givitharan Givitharan in மொபைல்

பிரபல குறுஞ்செய்தி சேவையையான வாட்ஸ் ஆப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அன்ரோயிட் மற்றும் iOS சானங்களில் இப் புதிய பதிப்பினை பயன்படுத்த முடியும்.

எனினும் iOS 9 இயங்குதளத்திற்கு பின்னரான இயங்குதளங்களில் மாத்திரம் இச் செயலியின் புதிய பதிப்பு செயற்படக்கூடியதாக இருக்கின்றது.

இதேவேளை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் iOS 7, iOS 8 ஆகியவற்றிற்கான வாட்ஸ் செயலிக்குரிய பதிப்புக்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றினை நிறுத்தவுள்ளது.

அத்துடன் இவ் வருடம் டிசர்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் விண்டோஸ் ஃபோன் பயனர்கள் வாட்சப்பினை பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாட்ஸ் ஆப்பில் சட் செய்த விடயங்களை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிகொள்ளும் வசதியும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்