உங்கள் ஐபோன்களில் இந்த பிரச்னை இருந்தால் ஆப்பிள் உடனே சரி செய்து தரும்

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஆண்டுதோறும் ஐபோன்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக பழுதுபார்க்கும் சேவையையும் வழங்கி வருகின்றது.

இந்நிலையில் தற்போது iPhone 6 மற்றும் iPhone 6S Plus பாவனையாளர்களுக்காக ஓர் வரப்பிரசாதத்தை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது இவ் வகையான கைப்பேசிகளில் மின் இணைப்பு தொடர்பான (Power Issue) பிரச்னைகள் காணப்படின் அவற்றினை சரிசெய்து தருகின்றது.

ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த இக் கைப்பேசிகளின் சில தொடர்களில் மேற்கண்ட பிரச்னை கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே குறித்த சேவையை வழங்க அந்நிறுவனம் முன்வந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2019 ஆகஸ்ட் மாதம் வரை வடிவமைக்கப்பட்ட iPhone 6 மற்றும் iPhone 6S Plus கைப்பேசிகளில் இப் பிரச்னை இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இச் சேவையினை இலவசமாகவே ஆப்பிள் நிறுவனம் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்