குறைந்த விலை, அசத்தலான வசதிகள்: அறிமுகமாகியது Infinix S5 கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
90Shares

ஹொங்ஹொங்கினை தளமாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான Infinix ஆனது தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.

Infinix S5 எனும் குறித்த கைப்பேசியனது 6.6 அங்குல அளவுடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இது தவிர Helio P22 mobile processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் 256GB வரை அதிகரிக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.

இவற்றுடன் 32 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா மற்றும் 16 மெகாபிக்சல்கள், 5 மெகாபிக்சல்கள், 2 மெகாபிக்சல்களைக் கொண்ட 3 பிரதான கமெராக்களையும் உள்ளடக்கியுள்ளது.

நீடித்து உழைக்கக்கூடிய 4000mAh மின்கலத்தினையும் கொண்டுள்ள இக் கைப்பேசியின் விலையானது 125 டொலர்கள் ஆகும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்