Nokia 8.2 5G கைப்பேசியின் சிறப்பம்சங்கள் வெளியாகின

Report Print Givitharan Givitharan in மொபைல்

நோக்கிய நிறுவனமானது தனது புதிய 5G ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் Nokia 8.2 எனும் குறித்த ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி குறித்த கைப்பேசியானது Qualcomm Snapdragon 735 processor உடன் கூடியதாக வெளிவரவுள்ளது.

மேலும் இக் கைப்பேசியில் 3 பதிப்புக்கள் வெளிவரவுள்ளன.

அவற்றில் ஒன்று பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டதாகவும், மற்றையது 6GB RAM, 128GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டதாகவும் மூன்றாவது கைப்பேசியானது 8GB RAM மற்றும் 256GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

இக் கைப்பேசிகளில் உள்ள கமெராக்கள் 64 மெகாபிக்சல்களை உடைய சென்சாரினைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எத்தனை கமெராக்களை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படவில்லை.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers