108MP கமெராவினை உடைய Xiaomi கைப்பேசி எப்போது அறிமுகமாகின்றது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்

சீனாவை சேர்ந்த ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான Xiaomi கைப்பேசி கமெராவில் புதிய புரட்சி ஒன்றினை ஏற்படுத்தவுள்ளது.

இதன்படி தனது Mi CC9 Pro கைப்பேசியில் 108 மெகாபிக்சல்களை உடைய கமெராவினை உள்ளடக்கியுள்ளது.

இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தன.

இதனை அடுத்து கைப்பேசி பிரியர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு எகிறியிருந்தது.

இந்நிலையில் தற்போது குறித்த கைப்பேசி எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் எதிர்வரும் நொவெம்பர் மாதம் 5 ஆம் திகதி Mi CC9 Pro கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இக் கைப்பேசியின் செல்ஃபி கமெராவும் 32 மெகாபிக்சல்களை உடையது என்பது கூடுதல் தகவல்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers