மொபைல் செக்கியூரிட்டி நிறுவனங்களுடன் கைகோர்க்கும் கூகுள்: காரணம் இதுதான்

Report Print Givitharan Givitharan in மொபைல்

கூகுளானது எதிர்கால தொழில்நுட்ப உலகினை கருத்தில்கொண்டு மிகவும் ஆழமாக காலூன்றி வருகின்றது.

இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அந்நிறுவனம் எடுத்துவருகின்றது.

இதன் ஒரு அங்கமாக மொபைல் செக்கியூரிட்டில் நிறுவனங்களுடன் கைகோர்க்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ESET, Lookout மற்றும் Zimperium ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளது.

அன்ரோயிட் சாதனங்களுக்காக பிளே ஸ்டோரில் தரவேற்றப்படும் அப்பிளிக்கேஷன்களில் தீங்குவிளைவிக்கக்கூடியவையும் காணப்படுகின்றன.

எனவே இவ்வாறான அப்பிளிக்கேஷன்களை கண்டுபிடித்து நீக்கவேண்டிய தேவை கூகுள் நிறுவனத்திற்கு காணப்படுகின்றது.

இதனைக் கருத்தில்கொண்டே குறித்த நிறுவனங்களுடன் கூகுள் இணைகின்றது.

இக்கூட்டு முயற்சிக்கு App Defense Alliance எனப்பெயரிடப்பட்டுள்ளது.

இதேவேளை 2.5 பில்லியனிற்கு மேற்பட்ட அன்ரோயிட் சாதனங்கள் பயன்படுத்தப்படுவதுடன் இவற்றின் பயனர்களை பாதுகாக்க வேண்டிய தேவையும் கூகுளிற்கு காணப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்