ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கை: அடுத்த வருடம் முதல் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு தடை

Report Print Givitharan Givitharan in மொபைல்

நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தனது நாட்டு ரகசியங்கள் கசிவது தொடர்பில் ரஷ்யா மிகுந்த அவதானமாக உள்ளது.

இந்நிலையில் தனது நாட்டு அப்பிளிக்கேஷன்களை கொண்டிராத மொபைல் சாதனங்களை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு முதல் தடை செய்ய ரஷ்யா தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், சாம்சுங் கைப்பேசிகள் உட்பட மேலும் சில சாதனங்களையும் இவ்வாறு தடைசெய்யவுள்ளது.

தடையின் பின்னர் குறித்த சாதனங்களை ரஷ்யாவில் விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.

அண்மைய தகவல்களின்படி தனது நாட்டு தொழில்நுட்பங்களை பிரபல்யப்படுத்துவதற்கு ரஷ்யா முயற்சித்து வருவதாகவும், இதன் ஒரு கட்டமாகவே இந்த தடை அமுலுக்கு வரவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்