நோக்கியா 8.2 கைப்பேசி அறிமுகமாகும் திகதி வெளியானது

Report Print Givitharan Givitharan in மொபைல்

நோக்கியா நிறுவனம் தனது புத்தம் புதிய அன்ரோயிட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் நோக்கியா 8.2 எனும் குறித்த கைப்பேசியானது எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இக் கைப்பேசியானது Qualcomm Snapdragon 735 processor, பிரதான நினைவகமாக 64GB RAM, 128GB அல்லது 256GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

அத்துடன் 64 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெராவினையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இக் கைப்பேசியின் விலை உட்பட ஏனைய சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகிவில்லை.

அறிமுகம் செய்யப்படுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்