அடுத்த வருடம் அறிமுகமாகும் iPhone 12 கைப்பேசி தொடர்பில் ஆப்பிள் நிறுவனத்தின் பிரம்மாண்ட இலக்கு

Report Print Givitharan Givitharan in மொபைல்

இவ் வருடம் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன்களை அறிமுகம் செய்திருந்தது.

கமெராவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்ட குறித்த கைப்பேசிகள் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் iPhone 12 கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

இதேவேளை சுமார் 100 மில்லியன் iPhone 12 கைப்பேசிகளை விற்பனை செய்வதற்கு ஆப்பிள் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

குறித்த ஐபோன்கள் 5G மொபைல் வலையமைப்பு தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்படவிருப்பதனால் அதிகளவு பயனர்களை கவர வாய்ப்பு உள்ளது.

இதனைக் கருத்தில்கொண்டே குறித்த இலக்கினை ஆப்பிள் நிறுவனம் நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்