iPhone 12 Pro மற்றும் 12 Pro Max தொடர்பில் வெளியான புதிய தகவல்

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதமளவில் தனது புதிய ஐபோன்களை அறிமுகம் செய்து வருகின்றது.

இப்படியான நிலையில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் iPhone 12 Pro மற்றும் 12 Pro Max எனும் இரு ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளது.

இக் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படுவதற்கு ஏறத்தாழ ஒரு வருட காலம் இருக்கின்ற நிலையில் தற்போது அவற்றின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகிவருகின்றன.

இவற்றின் வரிசையில் தற்போது மற்றுமொரு தகவல் கசிந்துள்ளது.

அதாவது குறித்த இரு கைப்பேசிகளின் திரைகளும் வழமையாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்களின் திரைகளை விடவும் மெல்லியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மெல்லிய திரைகளை வடிவமைப்பதற்கு Y-OCTA எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

இதனை ஏற்கனவே சாம்சுங் நிறுவனம் தனது கைப்பேசி திரைகளில் பயன்படுத்தி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers