Bright Night Sensor வசதியுடன் அறிமுகமாகும் Samsung Galaxy S11

Report Print Givitharan Givitharan in மொபைல்

சாம்சுங் நிறுவனம் அடுத்த வருடத்தில் அறிமுகம் செய்யவுள்ள மிகவும் முக்கியமான கைப்பேசிகளுள் ஒன்றாக Samsung Galaxy S11 காணப்படுகின்றது.

இக் கைப்பேசியில் handsets cameras தொழில்நுட்பம் உள்ளடக்கப்படும் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது Bright Night Sensor வசதியினையும் இக் கைப்பேசி கொண்டிருக்கும் என செய்தி கசிந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இவ் வருடம் அறிமுகம் செய்த தனது ஐபோன்களில் இதே தொழில்நுட்பத்தினை பயன்படுத்தியிருந்தது.

இதன் மூலம் இரவு நேரங்களிலும் சிறந்த புகைப்படங்களை எடுத்து மகிழ முடியும்.

எனவே ஆப்பிள் நிறுவனத்தின் குறித்த ஐபோன்களுக்கு நிகராக தனது புதிய Galaxy S11 கைப்பேசியினை அறிமுகம் செய்ய சாம்சுங் தீர்மானித்துள்ளது.

இதேவேளை 108 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெராவும் இக் கைப்பேசியில் தரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers