இக் கைப்பேசிகளில் அன்ரோயிட் 10 அப்டேட்டினை பெற்றுக்கொள்ள முடியாது

Report Print Givitharan Givitharan in மொபைல்

கூகுள் நிறுவனம் தனது புதிய இயங்குதளப் பதிப்பான அன்ரோயிட் 10-யினை அறிமுகம் செய்துள்ளது.

எனினும் குறிப்பிட்ட சில வகை கைப்பேசிகளில் மாத்திரமே இப் புதிய பதிப்பினை பயன்படுத்த முடியும்.

இந்நிலையில் சாம்சுங் நிறுவனம் தனது கைப்பேசிகளில் எவற்றுக்கு குறித்த அப்டேட் எப்போது கிடைக்கும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது.

இப் பட்டியலில் குறிப்பிடப்படாத சாம்சுங் கைப்பேசிகளில் அன்ரோயிட் 10 பதிப்பினை பயன்படுத்த முடியாது.

இதன்படி 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் Galaxy S10 series, Note 10 series, Galaxy S9 series, Galaxy Note 9, Galaxy M20, Galaxy M30 மற்றும் Galaxy A30 என்பவற்றில் பயன்படுத்த முடியும்.

அதன் பின்னர் ஏப்ரல் மாதமளவில் Galaxy A6, Galaxy A6+, Galaxy A7, Galaxy A9, Galaxy A50, Galaxy A70, Galaxy A70s, Galaxy A80, Galaxy M30s, Galaxy Tab S6, and the Galaxy Fold, Galaxy A8 Star, Galaxy A10, Galaxy A10s, Galaxy A20, Galaxy A30s, and the Galaxy M10s, Galaxy On6, Galaxy J6, மற்றும் Galaxy A20s என்பவற்றில் அப்டேட் செய்துகொள்ள முடியும்.

அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுப் பகுதியில் Galaxy J6+, Galaxy J7 Duo, Galaxy On8, Galaxy J8, Galaxy Tab S4, Galaxy Tab S5e, Galaxy Tab A 8 என்பவற்றிலும் அப்டேம் செய்துகொள்ளலாம்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்