விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது Xiaomi Redmi Note 8

Report Print Givitharan Givitharan in மொபைல்

சீனாவைச் சேர்ந்த பிரபல ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான Xiaomi கடந்த ஆகஸ்ட் மாதம் Redmi Note 8 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்டு மூன்று மாதங்ளே ஆன நிலையில் சுமார் 10 மில்லியன் கைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.3 அங்குல அளவுடைய திரையினைக் கொண்ட குறித்த கைப்பேசியானது மூன்று பதிப்புக்களாக வெளியாகியிருந்தது.

மூன்று கைப்பேசிகளும் Snapdragon 665 mobile processor ஐ கொண்டிருப்பதுடன் பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டு ஒரு பதிப்பும், பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டு மற்றுமொரு பதிப்பும், 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டு மற்றுமொரு பதிப்புமாக வெளியாகியிருந்தது.

இவற்றில் 13 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய இரு கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய ஒரு கமெரா என மொத்தம் 3 பிரதான கமெராக்களும் தரப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்