இதுவரை இல்லாத வர்ணத்தில் வெளியாகவுள்ள iPhone 12 Pro

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஆப்பிள் நிறுவனம் இவ்வருடம் தனது புதிய iPhone 12 கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் குறித்த கைப்பேசிகள் தொடர்பான தகவல்கள் இப்போதே கசிய ஆரம்பித்துள்ளன.

இதன்படி மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது அறிமுகம் செய்யப்படவுள்ள iPhone 12 Pro கைப்பேசியானது Navy Blue வர்ணத்திலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் வெளியான ஐபோன்கள் இவ் வர்ணத்தினைக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த கைப்பேசிகள் 5.4 அங்குலம், 6.1 அங்குலம் மற்றும் 6.7 அங்குல அளவுகளைக் கொண்டவையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்