சீனாவின் ஸ்மார்ட் கைப்பேசி விற்பனையில் பாரிய சரிவு: ஆய்வாளர்கள் தெரிவிப்பு

Report Print Givitharan Givitharan in மொபைல்

2020 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டிற்கான ஸ்மார்ட் கைப்பேசி விற்பனையில் சீனா பாரிய சரிவை எதிர்நோக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது இந்த சரிவானது 50 சதவீதத்தினால் குறைவடைந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பிரதான காரணமாக கொரோனா வைரஸ் தாக்கம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டும், பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனாவின் பல மாகாணங்களில் மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர்.

இது ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியையும் பாதித்துள்ளது.

எனினும் தனது 5G கைப்பேசியினை Huawei நிறுவனம் அறிமுகம் செய்யும் போது இச் சரிவிலிருந்து ஓரளவிற்கு சீனா மீள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers