சாம்சுங் அறிமுகம் செய்யவுள்ள Galaxy S20 கைப்பேசியில் உள்ள சிக்கல்

Report Print Givitharan Givitharan in மொபைல்
127Shares

வருடம் தோறும் தனது பிரதான கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துவரும் சாம்சுங் நிறுவனம் இவ்வருடம் Galaxy S12 எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்ய வேண்டும்.

எனினும் வழக்கத்திற்கு மாறாக Galaxy S20 எனும் பெயரில் இக் கைப்பேசியினை பல புதிய வசதிகளுடன் அறிமுகம் செய்யவுள்ளது.

இதில் முக்கியமாக 8K வீடியோ ரெகார்டிங் தொழில் நுட்பம் உள்ளடங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவசியம் மெமரி கார்ட் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 8K தொழில்நுட்பத்தில் ஒரு நிமிட வீடியோ ஒன்றினை பதிவு செய்வதற்கு 600MB சேமிப்பகம் தேவையாகும்.

எனவே சில நிமிடங்கள் அல்லது மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக வீடியோ பதிவு செய்யும்போது கைப்பேசியின் சேமிப்பு கொள்ளளவு போதாது இருக்கும்.

இதனை தவிர்ப்பதற்காகவே மெமரி கார்ட் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் குறித்த கைப்பேசியுடன் 128GB சேமிப்பு கொள்ளளவு தரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்