உலகம் முழுவதும் பிரபல்யமான ஐபோன் எது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்

கடந்த காலாண்டுப் பகுதியில் உலகம் முழுவதும் பிரபலமாக காணப்பட்ட ஐபோன் எது என்ற தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி iPhone XR உலகெங்கிலும் பிரபல்யமானதாக காணப்படுகின்றது.

கடந்த வருடம் iPhone 11 கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையிலும் iPhone XR கைப்பேசிக்கு சிறந்த வரவேற்பு காணப்படுகின்றது.

இதுவரையில் சுமார் 46.3 மில்லியன் iPhone XR கைப்பேசிகள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த கைப்பேசியானது 2018 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதமளவில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்