அட்டகாசமான வசதிகள் மற்றும் பட்ஜெட் விலையில் அறிமுகமாகியது Oppo A52

Report Print Givitharan Givitharan in மொபைல்

கடந்த 3 மாதங்களாக ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படுவதில் தாமதங்கள் ஏற்பட்டு வந்தன.

உலகளவில் ஏற்பட்ட கொரோனா அனர்த்த நிலையே இதற்கு காரணம் ஆகும்.

எனினும் தற்போது மீண்டும் முன்னணி நிறுவனங்கள் தமது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்ய ஆரம்பித்துள்ளன.

இந்த வரிசையில் தற்போது Oppo நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Oppo A52 இனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசியானது 6.5 அங்குல அளவு உடையதும் FHD+ தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான LCD திரையினை கொண்டுள்ளது.

அத்துடன் Qualcomm Snapdragon 665 mobile processor, பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

தவிர 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 12 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள் மற்றும் தலா 2 மெகாபிக்சல்களை உடைய இரு கமெராக்கள் என மொத்தமாக 4 பிரதான கமெராக்களையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் விலையானது 222 அமெரிக்க டொலர்களாகும். அதாவது இந்தியப் பெறுமதியில் 16,990 ரூபாய்கள் ஆகும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்