அறிமுகமாகியது Honor 9A ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

ஹுவாவி நிறுவனத்தின் துணை நிறுவனமாக திகழும் Honor தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

Honor 9A எனும் குறித்த கைப்பேசியானது 6.3 அங்குல அளவு, 1600 x 720 Pixel Resolution உடைய HD+ தொழில்நுட்பத்தினாலான திரையினைக் கொண்டுள்ளது.

இதில் MediaTek Helio P22 processor , பிரதான நினைவகமாக 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இவற்றுடன் 13 மெகாபிக்சல்கள், 5 மெகாபிக்சல்கள், 2 மெகாபிக்சல்களை உடைய 3 பிரதான கமெராக்களும், 8 மெகாபிக்சல்களை உடைய ஒரு செல்ஃபி கமெராவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீடித்து உழைக்கக்கூடிய 5,000 mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது.

இதன் விலையானது 150 யூரோக்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்