சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யும் Galaxy S20 Fan Edition ஸ்மார்ட் கைப்பேசிகள்

Report Print Givitharan Givitharan in மொபைல்

சாம்சுங் நிறுவனமானது ஏற்கணவே Galaxy S20 எனும் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.

இந்நிலையில் தற்போது Galaxy S20 Fan Edition எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்வதற்கு தயாராகிவருகின்றது.

இக் கைப்பேசிகள் 3 வகையான வர்ணங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

Prism Blue, Prism White, மற்றும் Prism Violet / Prism Light Violet எனும் வர்ணங்களே அவையாகும்.

இவற்றில் 128GB சேமிப்பகம் தரப்படவுள்ளதுடன் ஏனைய சிறப்பம்சங்கள் முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட Galaxy S20 கைப்பேசிகளை ஒத்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கைப்பேசிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் விற்பனைக்கு வரவுள்ளதுடன் ஆகஸ்ட் மாதமளவில் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்