சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 லைட் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக்

Report Print Kavitha in மொபைல்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 லைட் எடிஷன் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

தட்சு வலைதளத்தில் லீக் ஆகி உள்ள விவரங்களின் படி கேலக்ஸி எஸ்20 லைட் எடிஷன் EB-BG781ABY எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த மாடலில் 4370 எம்ஏஹெச் பேட்டரி, 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஐபி68 தர சான்று, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 6 ஜிபி ரேம் போன்ற சிறப்பம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது கிரீன், ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை நிறங்களில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த மாடல் விலை சற்று குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்