பட்ஜட் விலையில் சாம்சுங் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

சாம்சுங் நிறுவனமானது குறைந்த விலையில் Galaxy M01 எனும் புத்தம் புதிய கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 03 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியானது 5.3 அங்குல அளவுடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் இரண்டு பதிப்புக்களாக அறிமுகம் செய்யப்படவுள்ளதுடன், ஒன்று பிரதான நினைவகமாக 1GB RAM, 16GB சேமிப்பு கொள்ளளவுடையதாகவும், மற்றையது 2GB RAM, 32GB சேமிப்பு கொள்ளளவுடையதாகவும் காணப்படுகின்றது.

மேலும் இக் கைப்பேசியில் MediaTek MT6739 mobile processor உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவை தவிர 5 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா போன்றவையும் தரப்பட்டுள்ளன.

எனினும் இக் கைப்பேசியின் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்