உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது Samsung M31s கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

சாம்சுங் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Samsung M31s இனை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இந்நிலையில் இக் கைப்பேசியானது எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.

6.5 அங்குல அளவு, Super AMOLED தொழில்நுட்பத்தினைக் கொண்ட FHD+ தொடுதிரையினை இக் கைப்பேசி கொண்டுள்ளது.

அத்துடன் Samsung Exynos 9611 mobile processor, பிரதான நினைவகமாக 6GB அல்லது 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ளது.

தவிர 32 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 64 மெகாபிக்சல்கள், 12 மெகாபிக்சல்கள் உட்பட இரு 5 மெகாபிக்சல்கள் கமெரா என 4 பிரதான கமெராக்களும் தரப்பட்டுள்ளன.

மேலும் 25W அதிவேக சார்ஜ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட 6000 mAh மின்கலமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியின் விலையானது 260 டொலர்கள் ஆகும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்