இணைய ஜாம்பவான் கூகுள் அறிமுகம் செய்யும் புதிய கைப்பேசி: மக்களை கவருமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்

தொழில்நுட்ப உலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தினை தனதாக்கி வைத்திருக்கின்றது கூகுள்.

எனினும் இந்நிறுவனத்தின் சில அறிமுகங்கள் மக்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பினைப் பெறுவதில்லை.

இதேபோன்றே அந்நிறுவனம் அறிமுகம் செய்யும் பிக்சல் ஸ்மார்ட் கைப்பேசிகளும் அவ்வளவாக வரவேற்பினைப் பெறுவதில்லை.

எனினும் குறித்த காலத்திற்கு ஒருதடவை புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி தனது பிக்சல் கைப்பேசிகளை கூகுள் அறிமுகம் செய்து வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக இம் மாதம் 25 ஆம் திகதி மற்றுமொரு கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இக் கைப்பேசியானது 5G தொழில்நுட்பத்தினை கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தொழில்நுட்பம் உள்ளடக்கப்பட்டிருப்பதனால் Google Pixel 5 எனும் குறித்த கைப்பேசி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெறுமா என பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்