அறிமுகமாகியது Motorola Razr 5G ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

Motorola நிறுவனமானது Razr 5G எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.

இன்றைய தினம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இக் கைப்பேசியானது 6.2 அங்குல அளவு, 2142 x 876 Pixel Resolution உடைய பிரதான தொடுதிரை மற்றும் 2.7 அங்குல அளவுடைய இரண்டாம் நிலை தொடுதிரை என்பவற்றினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Qualcomm Snapdragon 765G mobile processor, பிரதான நினைவகமாக 8GB RAM, 256GB சேமிப்பகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

தவிர அதிக வேக சார்ஜ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட 2800 mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது.

5G தொழில்நுட்பத்தினை உடைய இக் கைப்பேசியில் 48 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 20 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதன் விலையானது 1500 யூரோக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்