உலக அளவில் இதுவரை விற்பனையாகியுள்ள 5G கைப்பேசிகள் எவ்வளவு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்

கடந்த 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உலகின் பல்வேறு நாடுகளிலும் வேகம் கூடிய இணையத் தொழில்நுட்பமான 5G அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இதனை அடுத்து குறித்த தொழில்நுட்பத்திற்கு இசைவான கைப்பேசிகளும் வடிவமைத்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இதுவரை உலகின் சில நாடுகளில் மாத்திரமே 5G தொழில்நுட்பம் காணப்படுகின்ற நிலையில் விற்பனை செய்யப்பட்டுள்ள 5G கைப்பேசிகளின் எண்ணிக்கை தொடர்பான விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 2020 ஆம் ஆண்டில் மாத்திரம் உலகளாவிய ரீதியில் சுமார் 278 மில்லியன் 5G கைப்பேசிகள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீனாவில் தயாரிக்கப்படும் 5G கைப்பேசிகளே மலிவானவையாக காணப்படுகின்றது எனவும் ஆகக் குறைந்தது 400 டொலர்களுக்கு கொள்வனவு செய்ய முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்