அறிமுகமாகியது Moto G9 Plus ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

Motorola நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Moto G9 Plus இனை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.

நேற்றைய தினம் அறிமுகம் செய்யப்பட்ட இக் கைப்பேசியானது 6.8 அங்குல அளவுடைய Full HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Snapdragon 730G mobile processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் 512GB வரை அதிகரிக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.

மேலும் 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 64 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், 2 மெகாபிக்சல்களை உடைய இரு கமெராக்கள் என மொத்தம் 4 பிரதான கமெராக்களையும் கொண்டுள்ளது.

Indigo Blue மற்றும் Rose Gold ஆகிய வர்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இக் கைப்பேசியின் விலையானது 470 டொலர்கள் ஆகும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்