அடுத்தடுத்து 5 ஸ்மார்ட் கைப்பேசிகளை அதிரடியாக அறிமுகம் செய்யும் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in மொபைல்

உலகத்தரம்வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக OnePlus காணப்படுகின்றது.

இந்த நிறுவனம் இவ் வருட இறுதிக்குள் அடுத்தடுத்து ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி சுமார் 5 வரையான ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

OnePlus 8T, OnePlus 8T Pro, OnePlus Nord N100, OnePlus Nord N105g போன்ற கைப்பேசிகளே இவ்வாறு அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இந்த தகவலை Evan Blass என்பவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாக வெளியிட்டுள்ளார்.

இக் கைப்பேசிகள் அனைத்தும் இந்தியப் பெறுமதியில் 16,000 ரூபாய் முதல் 18,000 ரூபாய் வரை இருக்கும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்