iPhone 12 கைப்பேசிகளை எப்போது கொள்வனவு செய்யலாம்? வெளியான தகவல்

Report Print Givitharan Givitharan in மொபைல்

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன்கள் தொடர்பிலான அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

எனினும் குறித்த கைப்பேசிகளின் சிறப்பம்சங்கள் எதனையும் வெளியிட்டிருக்கவில்லை.

இருந்தபோதிலும் குறித்த கைப்பேசிகளின் பிரதான நினைவகங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி iPhone 12 மற்றும் 12 Mini ஆகியவற்றின் பிரதான நினைவகங்கள் 4 GB RAM இனையும், iPhone 12 Pro மற்றும் 12 Pro Max ஆகியவை 6 GB RAM இனையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் iPhone 12 மற்றும் 12 Mini என்பன எதிர்வரும் அக்டோபர் 23 ஆம் திகதி விற்பனைக்கு வரவுள்ளன.

அதேபோன்று iPhone 12 Pro மற்றும் 12 Pro Max என்பன அடுத்த மாதம் 13 ஆம் திகதி விற்பனைக்கு வரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்