அறிமுகமாகியது Samsung Galaxy S20 FE ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
49Shares

சாம்சுங் நிறுவனம் ஏற்கணவே Samsung Galaxy S20 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.

இதன் மற்றுமொரு புதிய பதிப்பாக Samsung Galaxy S20 FE (Fan Edition) எனும் கைப்பேசியை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

முதன் முதலாக இக் கைப்பேசி அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் 256GB சேமிப்பு நினைவகம் தரப்பட்டுள்ளது.

மேலும் Cloud Navy எனும் ஒரே ஒரு வர்ணத்தில் மாத்திரம் இக் கைப்பேசி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் விலையானது 769.99 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

எனினும் இக் கைப்பேசியின் ஏனைய சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்