உங்கள் ஐபோனை வெப் கமெராவாக மாற்றி பயன்படுத்துவது எப்படி?

Report Print Givitharan Givitharan in மொபைல்
201Shares

மொபைல் சாதனங்களில் உள்ள கமெராக்களை பயன்படுத்தி வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்த முடியும்.

இதேபோன்று லேப்டொப்பிலும் கமெரா தரப்பட்டுள்ளது.

எனினும் டெக்ஸ்டாப்பில் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கு பிரத்தியேக கமெராவினை பயன்படுத்துவது அவசியமாகும்.

இதற்கு பதிலாக ஐபோனினை வெப் கமெராவாக பயன்படுத்தக்கூடிய வசதி காணப்படுகின்றது.

இவ்வாறு மாற்றியமைப்பதற்கு ஆப்ஸ் ஸ்டோர் சென்று EpocCam எனும் அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் உங்கள் Mac அல்லது விண்டோஸ் கணினியில் சென்று www.kinoni.com எனும் இணையத்தளத்திற்கு சென்று பொருத்தமான முறைமை மென்பொருளினை தரவிறக்கம் செய்ய வேண்டும்.

தரவிறக்கம் செய்த மென்பொருளை நிறுவி கணினியை மீளவும் செயற்படுத்தவும்.

தொடர்ந்து ஐபோனில் EpocCam அப்பிளிக்கேஷனை திறக்கவும்.

தொடர்ந்து ஐபோனினை USB கேபிள் அல்லது Wi-Fi ஊடாக கணினியுடன் இணைக்க வேண்டும்.

இணைக்கப்பட்ட பின்னர் EpocCam ஆனது தானாகவே கணினியை இனங்கண்டு வீடியோவினை காண்பிக்க ஆரம்பிக்கும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்