ஆப்பிள் நிறுவனம் அண்மையில் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான iPhone 12 இன் சில மொடல்களை அறிமுகம் செய்துள்ளது.
இவற்றினை தற்போது வாடிக்கையாளர்கள் முற்பதிவு செய்து கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கின்றது.
இப்படியிருக்கையில் குறித்த கைப்பேசிகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது பல iPhone 12 கைப்பேசிகளின் திரைகளில் குறைபாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட iPhone 12 கைப்பேசி திரைகளில் குறைபாடுகள் காணப்படுகின்றமை ஐபோன் பிரியர்களை தற்போது அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இக் குறைபாட்டினை ஆப்பிள் நிறுவனம் நிவர்த்தி செய்யுமா என்பது தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.