ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை சொந்தமாக்குவதே பலரின் கனவாகக் காணப்படுகின்றது.
இதற்காக தமது சிறுநீரகத்தை விற்றவர்களின் கதைகளை எல்லாம் கேள்விப்பட்டிருப்போம்.
இப்படியிருக்கையில் ஆப்பிள் நிறுவனம் இவ்வருடம் அறிமுகம் செய்த iPhone 12 pro Max கைப்பேசிகளை திருடிய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் ஈடுபட்டவர் ஒரு டெலிவரி போய் என்பது தெரியவந்துள்ளது.
14 கைப்பேசிகளை திருடியுள்ள அவர் செம ஜாலியாக இருந்துள்ளார்.
எனினும் அதிரடியாக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகள் மூலம் குறித்த நபர் கைது செய்யப்பட்டு ஐபோன்களும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த நபர் Tang எனும் பெயருடையவர் எனவும் இனங்காணப்பட்டுள்ளார்.