180 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும் போலி iPhone 12 Pro Max: கண்டுபிடிப்பது எப்படி?

Report Print Givitharan Givitharan in மொபைல்
48Shares

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு எப்போதுமே ஒரு மவுசு காணப்படுகின்றது.

இதனால் ஒவ்வொரு வருடமும் புதிய ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த பின்னர் அவற்றினைப் போன்ற போலியான ஐபோன்களை வெவ்வேறு நிறுவனங்கள் அறிமுகம் செய்வது வழக்கமாக இருக்கின்றது.

இதன்படி இவ் வருடமும் போலியான iPhone 12 Pro Max அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் பெறுமதியானது வெறும் 180 டொலர்கள் ஆகும்.

ஆனால் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த iPhone 12 Pro Max கைப்பேசியின் விலையானது 1599 டொலர்களாகும்.

இந்நிலையில் இவ் இரு கைப்பேசிகளையும் எவ்வாறு வேறுபடுத்தி அறிவது என்பது தொடர்பான வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

EverythingApplePro எனும் யூடியூப் சேனலில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள போலியான iPhone 12 Pro Max தொடர்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

அவ் வீடியோவை இங்கே காணலாம்,

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்