TCL அறிமுகம் செய்யும் 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
15Shares

சீனாவை சேர்ந்த ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் TCL புதிய 5G கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

TCL 20 5G என அழைக்கப்படும் இக் கைப்பேசியில் 6.67 அங்குல அளவு, 2400 x 1080 Pixel Resolution என்பவற்றினைக் கொண்ட Full HD+ தொடுதிரை காணப்படுகின்றது.

அத்துடன் Qualcomm Snapdragon 690 mobile processor, பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 128GB அல்லது 256GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

சேமிப்பு நினைவகத்தினை microSD கார்ட்டின் உதவியுடன் அதிகரிக்கக்கூடிய வசதியும் காணப்படுகின்றது.

இவற்றுடன் 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 48 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய 3 பிரதான கமெராக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இக் கைப்பேசியானது 4500 mAh மின்கலத்தினைக் கொண்டதாக காணப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்