ஆப்பிள் நிறுவனம் இவ்வருடம் ஐபோன் 12 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி மொடல்களை அறிமுகம் செய்துள்ளது.
எனினும் இக் கைப்பேசிகளுடன் சார்ஜர் தரப்படாது எனவும் அவற்றினை தனியாகவே கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஐபோன் 12 கைப்பேசிகளின் விலை அதிகமாக இருப்பதனால் பயனர்களுக்கு அதன் விலையினை சற்று குறைத்து காண்பிப்பதற்காகவே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அதுமாத்திரமன்றி ஹெட்போன்களையும் தனியாகவே கொள்வனவு செய்ய வேண்டும்.
எனினும் பிரேஸில் நாட்டில் விற்பனை செய்யப்பட்ட ஐபோன் 12 கைப்பேசிகளுடன் சார்ஜர்களும் வழங்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் பிரேஸிலிலுள்ள வாடிக்கையாளர்களின் நலன்களைக் காக்கக்கூடிய Brazilian Consumer Defense Code இன் தலையீட்டின் காரணமாகவே இவ்வாறு சார்ஜரும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏனைய நாடுகளிலும் ஐபோன் 12 விற்பனையின்போது சார்ஜரும் தரப்படலாம் என ஐபோன் பிரியர்கள் நம்புகின்றனர்.