ஆப்பிள் நிறுவனம் வழங்கவுள்ள இலவச சலுகை: அனுபவிக்க நீங்கள் தயாரா?

Report Print Givitharan Givitharan in மொபைல்
264Shares

உலகிலேயே விலை கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளாக ஐபோன்கள் காணப்படுகின்றன.

எனினும் அவற்றிலுள்ள வசதிகள் மற்றும் தனித்தன்மை காரணமாக அதிகளவானவர்கள் ஐபோன்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனமும் கொள்வனவை ஊக்குவிப்பதற்காக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக ஐபோன் 11 பயனர்களுக்கு மகிழ்ச்சிகரமாக தகவலை வெளியிட்டுள்ளது ஆப்பிள்.

அதாவது தற்போது அதிக அளவில் விற்பனையாகி வரும் ஐபோன் 11 கைப்பேசியில் உள்ள குறைபாடுகளை இலவசமாகவே திருத்தி வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக திரைகள் பழுதடைந்திருந்தால் அவற்றினை இலவசமாக மாற்றிக்கொடுக்கவுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

தேவைப்படின் ஐபோன் 11 கைப்பேசியையே புதிதாக மாற்றித்தருவதற்கும் அந்நிறுவனம் தயாராக இருக்கின்றது.

எனினும் இதற்கு சில நிபந்தனைகளை ஆப்பிள் நிறுவனம் விதித்துள்ளது.

குறிப்பாக பழுதடைந்த ஐபோன் 11 ஆனது 2019 - 2020 ஆண்டு காலப் பகுதிக்குள் உற்பத்தி செய்யப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்