சாம்சுங் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய 5G ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
69Shares

ஏனைய ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களை விடவும் ஒரு வருடத்தில் அதிக ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் நிறுவனமாக சாம்சுங் விளங்குகின்றது.

இந்த வரிசையில் அடுத்ததாக Galaxy A52 5G எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் குறித்த கைப்பேசியின் புகைப்படம் உள்ளடங்கலாக சில சிறப்பம்சங்களும் வெளியாகியுள்ளன.

இதன்படி இக் கைப்பேசியானது 6.5 அங்குல அளவுடைய FHD+ தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரையினை உள்ளடக்கியுள்ளது.

அத்துடன் 48 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவும் தரப்பட்டுள்ளது.

இதனுடன் மேலும் 3 பிரதான கமெராக்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றின் மெகாபிக்சல்கள் வெளியிடப்படவில்லை.

அத்துடன் செல்ஃபி கமெராவின் மெகாபிக்சல்கள் மற்றும் விலை தொடர்பான தகவலும் தற்போதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்