விரைவாக சார்ஜ் இறங்கும் ஐபோன் பட்டரிகள்: காரணம் இதுதான்

Report Print Givitharan Givitharan in மொபைல்
343Shares

ஆப்பிள் நிறுவனம் தற்போது தனது மொபைல் சாதனங்களுக்கான புதிய இயங்குதளப் பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது.

iOS 14.2 எனும் குறித்த பதிப்பானது ஐபோன்கள் மற்றும் ஐபேட்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ் இயங்குதளப் பதிப்பினைப் பயன்படுத்துவதனால் குறித்த மொபைல் சாதனங்களின் மின்கலப் பாவனையானது மிகவும் குறைவாக இருப்பதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

இப் பிரச்சினை தொடர்பாக பல பயனர்கள் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 30 நிமிடங்களில் தனது ஐபோன் பட்டரி சார்ஜ் ஆனது 50 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் ஆப்பிள் நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எனினும் இதற்கான பதில் எதனையும் தற்போதுவரை ஆப்பிள் நிறுவனம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்