ஆப்பிள் நிறுவனம் இவ் வருடம் ஐபோன் 12 கைப்பேசிகளை அறிமுகம் செய்துள்ளமை தெரிந்ததே.
இந்நிலையில் அடுத்த வருடம் ஐபோன் 13 கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.
இக் கைப்பேசிகள் தொடர்பான தகவல்கள் இப்போதே கசிய ஆரம்பித்துள்ளன.
இதன்படி குறித்த கைப்பேசிகளின் பெட்டியில் எந்தவிதமான உபகரணங்களும் தரப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது சார்ஜர், ஹெட்போன் உட்பட லைட்னிங் கேபிள் என்பனவும் உள்ளடக்கப்பட்டிருக்காது.
இவ் வருடம் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 12 கைப்பேசிகளில் சார்ஜர் மற்றும் ஹெட்போன் என்பன தரப்படாது எனவும் அவற்றினை வேறாகவே கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் பிரேஸிலில் பின்னர் சார்ஜர் வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையிலேயே அடுத்த வருடம் அறிமுகம் செய்யப்படவுள்ள ஐபோன் 13 கைப்பேசிகளுடன் எவ்விதமான உபகரணங்களும் வழங்கப்படாது எனவும் அவற்றினை தனியாகவே கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.