3 மடிப்பு டிஸ்பிளேவுடன் புதிய X Nendo ஸ்லைடு ஃபோனை அறிமுகப்படுத்தும் Oppo

Report Print Gokulan Gokulan in மொபைல்
35Shares

Oppo, Nendo நிறுவனத்துடன் இணைந்து, நான்காவது சீனா சர்வதேச தொழில்துறை வடிவமைப்பு எக்ஸ்போவில் (CIIDE) 'slide-phone' மற்றும் 'music-link' ஆகிய கான்செப்ட் சாதனங்களைக் அறிமுகப்படுத்தியுள்ளது.

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான OPPO, ஜப்பானிய வடிவமைப்பு நிறுவனமான Nendoவுடன் இணைந்து கிளாசிக்கல் வடிவமைப்பு மற்றும் வசதிக்கு கவனம் செலுத்தும் இரண்டு கான்செப்ட் சாதனங்களை கனவுத் திட்டமாக கொண்டுவந்துள்ளது.

'slide-phone' கான்செப்ட் ஃபோனில் 3 மடிக்கக்கூடிய டிஸ்பிளேக்கள் உள்ளன, இது நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் ஃபோனை பல வடிவங்களில் பயன்படுத்த அனுமதிக்கிறது.

மேலும், மற்றோரு கான்செப்ட் சாதனமான 'music-link' எனும் புதிய மாறுபட்ட TWS இயர்போன் ஸ்மார்ட்வாட்ச், AI ஸ்பீக்கர், போர்ட்டபிள் சார்ஜர் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் போன்ற சாதனங்களில் இதில் வேண்டுமானாலும் இணைத்து பயன்படுத்தக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

OPPO ஒரு செய்திக்குறிப்பு மற்றும் தொடர்ச்சியான ட்வீட் மூலம் இந்த கான்செப்ட்டின் வளர்ச்சியைப் பகிர்ந்து கொண்டது. மேலும், இந்தகே கான்செப்ட்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை யூடியூபில் வெளியிடப்பட்டுள்ள டெமோ வீடியோக்கள் சிறப்பாக விளக்குகின்றன.

எப்படியிருந்தாலும் அவற்றின் தற்போதைய வடிவத்தில், இந்த கான்செப்ட் சாதனங்களில் ஏதேனும் ஒன்றை OPPO நிறுவனம் எப்போதாவது உற்பத்தி செய்யுமா என்று சொல்வது கடினம். ஆனால் அடுத்து வரும் ஆண்டுகளில் OPPOவில் அசத்தலான தயாரிப்புகள் இல்லை என்றும் சொல்ல முடியாது.

கடந்த மாத இறுதியில், OPPO 6.7 அங்குலத்தில் இருந்து 7.4 அங்குலமாக நீட்டிக்க கூடிய ஒரு rollable oLED டிஸ்பிளே இடம்பெறும் OPPO X 2021 ஸ்மார்ட்போனை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்