Xiaomi Mi 11 ஸ்மார்ட் கைப்பேசி எப்போது அறிமுகமாகின்றது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்
24Shares

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Xiaomi தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் டிசம்பர் 28 ஆம் திகதி அறிமுகம் செய்யவுள்ளது.

Xiaomi Mi 11 எனும் இக் கைப்பேசியானது Qualcomm Snapdragon 888 mobile processor உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதான நினைவகமாக 12GB RAM உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் 50 மெகாபிக்சல்களை உடைய கமெரா, 12 மெகாபிக்சல்களை உடைய கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவற்றின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை முழுமையாக வெளியிடப்படவில்லை.

எவ்வாறெனினும் குறித்த தினத்தில் முதன் முறையாக சீனாவிலேயே இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

எனவே அடுத்து வரும் சில தினங்களில் இக் கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் விலை என்பன வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்